6th of November 2013
சென்னை::மீண்டும் தமிழில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். சூர்யாவுடன் ஏழாம் அறிவு, தனுஷுடன் 3 படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், தமிழில் புதிய படம் எதுவும் ஏற்கவில்லை. இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 2 வருடத்துக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார் ஸ்ருதி. இது பற்றி அவர் கூறியதாவது:
என்னைப் பொறுத்தவரை மொழி பார்த்து படங்களில் நடிக்கவில்லை. இந்தியாவில் எல்லா மொழியிலும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அதனால் எந்த மொழி படத்தில் வாய்ப்பு வந்தாலும் ஏற்கிறேன். குறிப்பிட்ட மொழியில்தான் நடிப்பேன் என்று எனக்கு நானே ஒரு வேலியை அமைத்துக்கொள்ள விரும்பவில்லை. சமீபத்தில் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிக்கும் பிருத்வி படத்துக்காக பாடல் பாடினேன். தீபாவளியை அம்மா மற்றும் தங்கையுடன் கொண்டாடினேன். நிறைய ஸ்வீட் சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தேன். தெலுங்கில் ரேஸ் குர்ரம் என்ற படத்தில் நடிக்கிறேன். தமிழில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அது ஆர்யா படமா என கேட்கிறார்கள். அதுபற்றி விரைவில் தெரிவிப்பேன்.

Comments
Post a Comment