இப்போது வரும் பெரும்பாலான படங்களில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள்: நடிகைகள் ஆவேசம்!!!

14th of November 2013
சென்னை::இப்போது வரும் பெரும்பாலான படங்களில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்று தேவயானி தெரிவித்துள்ளார்.
 
பட்டாளம்,’ ‘காதல் சொல்ல வந்தேன்’ ஆகிய படங்களில் நடித்த பாலாஜி நாயகனாக நடிக்கும் படம் ‘மெய்யழகி’. நாயகியாக ஜெய்குவேதனி நடித்துள்ளார். ஆர்.டி.ஜெயவேல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
 
இதனிடையே மெய்யழகி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதன் டிரைலரை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி வெளியிட, இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார். விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை தேவயானி, ‘‘இப்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வருவது குறைந்து விட்டது.
 
மெய்யழகி’ நல்ல கதையம்சம் கொண்ட படமாக அமைந்துள்ளது. இப்போது வரும் பெரும்பாலான படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள்! மச்சி, மச்சான் என்று வசனம் பேசுகிறார்கள்! குடிக்காரர்கள் ஆட்டம் போடும் ‘டாஸ்மாக்’ காட்சிகளும் நிறைய இடம் பெறுகின்றன. இது சமூகத்துக்கு நல்ல விஷயமாக தோணவில்லை என்றார்.
 
தொடர்ந்து பேசிய நடிகை சோனாவும், படத்தில் இடம்பெறும் ‘டாஸ்மாக்’ காட்சிகள் குறித்து பேசினார். ‘‘சமீபகாலமாக சில படங்களை பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பெண்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் இடம் பெறுகிறது. அது மாதிரி ‘டாஸ்மாக்’ காட்சிகள் இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு’’ நிறைய படங்களில் டாஸ்மாக் காட்சிகளை வைக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம் இல்லை’’ என்றார்!
tamil matrimony_HOME_468x60.gif

Comments