23rd of November 2013
சென்னை::நடிகர் ரியாஸ் கான், நடிகை உமா ரியாஸ்கான் தம்பதிகளின் மகன் ஷாரிக் நடிகராக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷை நடிகராக அறிமுகப்படுத்தும் பென்சில்தான் ஷாரிக் அறிமுகமாகும் படம்.
ரியாஸ் கானை தமிழைவிட மலையாளப் படவுலகுதான் அதிகம் பயன்படுத்துகிறது. வில்லன், குணச்சித்திரம் என்று மனிதர் அங்கு செம பிஸி. உமா ரியாஸ்கான் சிறந்த நடிகை. அன்பே சிவம்தான் அதனை முதலில் நிரூபித்தது.
மௌனகுருவில் கர்ப்பிணி போலீஸ் அதிகாரியாக மௌனமாக கலக்கியிருந்தார். அவரைப் போன்றவ
ர்களுக்கு தீனிபோடும் திராணி தமிழ் சினிமாவுக்கு இல்லை.
போகட்டும். அவர்களின் மகன் ஷாரிக் பென்சில் படத்தில் அறிமுகமாகிறார். போட்டேஷூட்டில் ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யாவுடன் இவரும் கலந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் ஜி.வி.க்கு இணையான வேடம் என்று தெரிகிறது.
மீசையில்லாமல் சின்ன ரியாஸ்கான் போலிருக்கும் ஷாரிக் அம்மாவின் நடிப்பில் பாதியை காட்டினாலே கோடம்பாக்கத்தில் பெரிய அளவில் வரலாம்.
Comments
Post a Comment