8th of November 2013
சென்னை::நீ தானே என் பொன்வசந்தம், கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகியப் படங்களைத் தயாரித்த ஆர்.எஸ்.இண்போடெய்ன்மெண்ட் தற்போது ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கும் யான் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் ஜீவா, துளசி நாயர் ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தனது அடுத்தப் படத்தை அறிவித்துள்ள ஆர்.எஸ்.இண்போடெய்ன்மெண்ட் நிறுவனம் அப்படத்திற்கு 'இல்ல ஆனாலும் இருக்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் நகைச்சுவையான ஒரு திகில் படமாகும்.
இதில் 15 புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் அறிமுகமாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்கும் டி.கே, இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றவர்.
தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் 20 நாட்கள் படமாக்கப்பட்டுள்ள இப்படம் மேலும், 30 நாட்களுக்கு அங்கேயே படமாக்கப் பட உள்ளது.
பெரிய நட்சத்திரங்கள், பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து ஆர்.எஸ்.இண்போடெய்ன்மெண்ட் சார்பில், தொடர்ந்து வெற்றிப் படங்களை தயாரித்து வரும் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் "இல்ல ஆனாலும் இருக்கு' படம் எங்கள் நிறுவனத்தின் மிக முக்கியமான படமாக திகழும்." எனறு பெரும் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்.

Comments
Post a Comment