21st of November 2013
சென்னை::சீனிகம், பா” ஆகிய வித்தியாசமான ஹிந்திப் படங்களை இயக்கிய பால்கி அடுத்து இயக்கப் போகும் ஹிந்திப் படத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு பால்கியின் அ
பிமான இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கப் போகிறார்.
இயக்குனர் பால்கி மட்டுமல்ல, அமிதாப், தனுஷ் ஆகியோரும் இளையராஜாவின் தீவிரமான ரசிகர்கள்தான்.
இளையராஜா இசையில் நடிப்பது குறித்து தனுஷ் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல, இளையராஜாவைப் பற்றி அவர் சில மாதங்களுக்கு முன் சொன்ன வார்த்தைகள் தற்போது ஞாபகத்தில் வந்தன.
இளையராஜாவின் தீவிரமான ரசிகர்களுக்குப் பிடித்தமான அந்த தனுஷின் பேச்சு இதோ…
இளையராஜா அவர்களின் இசை எனக்குத் தாலாட்டு. அவருடைய இசை எனக்கு சாப்பாடு. அவருடைய இசை கலந்ததுதான் என்னுடைய சிறுவயதுப் பருவம். அவருடைய இசைதான் என்னுடைய முதல் காதல். அவருடைய இசைதான் என்னுடைய முதல் தோல்வி. அவருடைய இசைதான் என்னுடைய முதல் முத்தம். அதுதான் என்னுடைய முதல் காதல் தோல்வி, என்னுடைய வெற்றி. இப்படி என் ரத்தத்தில் கலந்ததுதான் இளையராஜாவின் இசை”.
Comments
Post a Comment