19th of November 2013
சென்னை::'இனி, என் தாய்மொழியான, இந்திக்கு தான் முதலிடம் கொடுப்பேன்' என்று, 'ஹிம்மத்வாலா' படத்தில் நடித்த தமன்னா, அதிரடி ஸ்டேட்மென்ட் கொடுத்தார். ஆனால், அந்த படம் தோல்வியடைந்து, அதிர்ச்சி கொடுத்ததால், மறுபடியும், தென் மாநிலங்களில் விட்ட இடத்தை பிடிக்க, வேகமாக ஓடி வந்தார்.
அவர் எடுத்த தீவிர முயற்சியின் பலனாக, வீரம் படத்தில், அஜீத்துக்கு ஜோடியானார். அதனால், மீண்டும் கோலிவுட்டில் ஆழமாக காலுன்று முயற்சிகளில் இறங்கியுள்ள தமன்னாவுக்கு, அடுத்து, ஆர்யா நடிக்கும் படவாய்ப்பும் கிடைத்துள்ளது. பாஸ் என்ற பாஸ்கரன் படத்தை இயக்கிய ராஜேஷ் இயக்கும் இந்த படத்தில், ரொமான்ஸ், காமெடி கலந்த கலகலப்பான வேடத்தில் நடிக்கிறார் தமன்னா.
Comments
Post a Comment