6th of November 2013
சென்னை::தலைப்பை படித்தவுடன் ஏதோ, கமல் தனது அடுத்த முயற்சிக்கு தயாராகிவிட்டார் என்று நினைக்க வேண்டாம், இது சினிமாவை தவிர்த்து ஒரு பயணம்.
ஐக்கிய அரபு நாட்டின் தலைநகர் ஷார்ஜாவில் நாளை சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்குகிறது. இந்த புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்கிறார்கள்.
பல்வேறு நாடுகள் பங்குபெறும் இந்த புத்தக கண்காட்சி 32வது ஆண்டாக நடைபெறுகிறது. இன்று (நவ.06) தொடங்கும் இந்த கண்காட்சி 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி இந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
இக்கண்காட்சியில் 53 நாடுகளில் இருந்து 1,010 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 405,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் இடம்பெறும். இந்தியா உள்பட பல நாடுகள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன.
போர்ச்சுகல், நியூஸிலாந்து, ஹங்கேரி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் முதல் முறையாக இக்கண்காட்சியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜாவில் உள்ள எக்ஸ்போ சென்டரில் நடைபெறும் இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.

Comments
Post a Comment