14th of November 2013
சென்னை::மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகை ஏமி ஜாக்சன் கடந்த, 18 மாதங்களாக ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.தமிழ் தெரிந்த நடிகை தான், இந்த படத்தின் கேரக்டருக்கு சரியாக இருக்கும் என்று சமந்தாவிடம் பேசியிருந்த ஷங்கர், அவர் தோல் அலர்ஜி நோய் காரணமாக சிகிச்சைக்கு சென்றதால், ஏமியை புக் செய்தார்.
ஆனால், தமிழில் ஓரிரு வார்த்தை கூட பேசத்தெரியாத ஏமிக்கு ஆரம்பத்தில் இருந்தே, இப்படத்தில் நடிப்பது, ஒரு பெரிய சவாலாக இருந்து வருகிறதாம். அதனால், அவர் நடிக்கும் மணி யம்மாள் என்ற கேடருக்கு ஏற்றபடி, அவரை மாற்ற, படப்பிடிப்பு தளத்தில்,மணியம்மாள் என்றே ஏமியை அனைவரும் அழைத்தனராம். இதன்பின், படப்பிடிப்பின் போது , அந்த கேரக்டராகவே மாறி, நடிப்பில், அனைவரையும் அசத்திவிட்டாராம்.
Comments
Post a Comment