11th of November 2013
சென்னை::நயன்தாரா - நஸ்ரியா மோதலுக்கு ஆர்யாதான் காரணம் என்ற புது தகவல் கசிந்துள்ளது.நய்யாண்டி படத்தில் தொப்புள் காட்டும் காட்சியில் நடிக்க மறுத்தார் நஸ்ரியா. டூப்பை வைத்து அந்த காட்சியை படமாக்கியதும் போலீசில் நஸ்ரியா புகார் அளித்தார். இது பற்றி நயன்தாரா கூறும்போது, இதையெல்லாம் நஸ்ரியா பெரிதுபடுத்தக் கூடாது. சினிமாவில் கமர்ஷியல் அம்சங்களுக்காக கவர்ச்சி காட்சியை இயக்குனர்கள் பயன்படுத்துவது சகஜம் என்றார்.
இதற்கு பதிலள¤த்த நஸ்ரியா, நயன்தாராவின் அறிவுரை எனக¢கு தேவையில்லை. என் விஷயத்தில் அவர் தலையிடுவதை விரும்பவில்லை என நயன்தாராவுக்கு டோஸ் விட்டார். நயன்தாரா & நஸ்ரியா மோதலுக்கு பின்னணியில் இருப்பது ஆர்யாதான் என கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா என மூவரும் சேர்ந்து ராஜா ராணி படத்தில் நடித்தனர். இத¤ல் நடித்தபோது ஆர்யா&நயன்தாரா இடையே நெருக்கம் ஏற்பட்டது. பாதி ஷூட்டிங் முடிந்த நிலையில், படத்தில் ஒரு முக்கிய கேரக்டருக்காக சேர்க்கப்பட்டவர் நஸ்ரியா. அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போதெல்லாம் ஆர்யா அவரை ஜாலியாக கலாய்ப்பாராம்.
ஷூட்டிங் இடைவெளியில் நஸ்ரியாவுடன் கடலை போடுவாராம். அப்போது ஸ்பாட்டில் இல்லாத நயனுக்கு இது பற்றி யூனிட்டார் தகவல் சொல்ல, அவர் கொதித்து போனாராம். ஆர்யாவை திருத்த முடியாது என்பதால், நஸ்ரியாவை நாசுக்காக எச்சரித்தாராம். அப்போது முதலே நயனுக்கும் நஸ்ரியாவுக்கும் இடையே பகை பற்றிக்கொண்டது என்கிறது கோடம்பாக்க வட்டாரம். ராஜா ராணி பிரஸ் மீட்டில் கூட நயனுடன் நடித்த அனுபவம் பற்றி நஸ்ரியாவிடம் கேட்டபோது, அனுபவம் எல்லாம் ஒன்றுமில்லை. அவரை சீனியர் நடிகையாக பார்க்கிறேன் என்று மட்டும் முகத்தை உம்மென வைத்தபடி கூறினார். சமயம் பார்த்து நய்யாண்டி மேட்டரில் நஸ்ரியாவை நயன் தாக்க, பதிலுக்கு நஸ்ரியா தாக்க இவர்கள் மோதல் விவகாரம் சூடு பிடித்திருக்கிறது.
Comments
Post a Comment