கனடா நாட்டு தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர்!!!

6th of November 2013
சென்னை::(டொரண்டோ) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை கனடா நாட்டில் உள்ள தெரு ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சாதனைகளை போற்றி புகழாரம் சூட்டப்பட்டது.

பின்னர், மர்கம் பகுதியில் உள்ள பிரதான தெரு ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்(அல்லாஹ் - ரக்ஹா ரஹ்மான்) தெரு என பெயர் சூட்டப்பட்டது.

அந்த பெருமைக்குரிய பெயர் பலகையுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments