7th of November 2013
சென்னை::தீபாவளி ரேஸில் மற்ற இரண்டு படங்களையும் முந்திக் கொண்டு முதல் இடத்தில் இருக்கும் அஜித்தின் ‘ஆரம்பம்’ படம் ரிலீசான 6 நாட்களிலேயே 50 கோடி ரூபாயை வசூல் செய்து விட்டதாக நாம் நேற்று உறுதியான செய்தியை வெளியிட்டிருந்தோம்.
அந்தளவுக்கு அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சக முன்னணி ஹீரோக்களின் ரசிகர்களும் கூட ஆரம்பத்துக்கு உற்சாக வரவேற்பை கொடுத்து விட்டார்கள்.
அதுமட்டுமல்லாமல் யு கே பாக்ஸ் ஆபீஸிலும் கூட ரஜினியின் எந்திரன், சிவாஜி ஆகிய படங்களுக்கு அடுத்த மூன்றாவது இடத்தைப் பிடித்து வெளிநாடுகளிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது அஜித்தின் ஆரம்பம் படம்.
இதனால் உற்சாகமடைந்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு மேலும் கூடுதல் உற்சாகத்தை தரும் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள் வீரம் பட யூனிட்.
ஆமாம், ஆரம்பம் திரையிடப்பட்டிருக்கும் எல்லா தியேட்டர்களிலும் இன்றுமுதல் அஜித்தின் வீரம் படத்தின் டீஸரையும் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்.
சிறுத்தை சிவா டைரக்ஷனில் ஆக்ஷன் ப்ளஸ் கமர்ஷியல் படமாக தயாராகியுள்ள இந்தப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் அறிமுகமாகிறார் தமன்னா. வரும் பொங்கல் விருந்தாக அமையவுள்ள இந்தப்படத்தின் டீஸரை இன்று முதல் சென்னையிலுள்ள தியேட்டர்களிலும், நாளை 7 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் உள்ள தியேட்டர்களிலும் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்.
அந்த வகையில் இந்த தீபாவளி தல தீபாவளியாக அமைந்ததோடு மட்டுமில்லாமல் வரும் 2014 பொங்கலும் ரசிகர்களுக்கு தல பொங்கலாக அமையும் என நம்பும் அஜித் ரசிகர்கள் அதற்கான கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள்.
Comments
Post a Comment