6th of November 2013
சென்னை::‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு தனது சொந்தத் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
அதோடு ‘இங்க என்ன சொல்லுது’ படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில், தன்னைப் பற்றி தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.
நான் யாருக்குமே எந்த கெடுதல் செஞ்சேன்னு இதுவரைக்கும் தெரியலை…புரியவும் இல்லை. என்னை விமர்சிச்சது மாதிரி, வேறு எந்த நடிகரையும் மீடியா விமர்சிச்சது இல்லன்னு நினைக்கிறேன்.
அந்த நடிகையோட சுத்தறேன், அவங்க அக்காவோட சுத்தறன்னு, என்னை ஒரு ‘பிளேபாய்’ ரேஞ்சுக்கு கேவலப்படுத்தி எழுதினாங்க. சிம்புவா, அவன் திமிர் பிடிச்சவன், நம்பினவங்க வாழ்க்கையை அழிச்சிடுவான்னு, அவதூறு கிளப்பிக் காலி பண்றாங்க.சினிமாவில என் மேல அன்பு காட்டினவங்களை விட, அம்பு விட்டவங்கதான் ஜாஸ்தி, ” என தெரிவித்திருக்கிறார்.
Comments
Post a Comment