நயன்தாராவுடன் சண்டை? மறுபடியும் தனுஷுடன் நடிக்கிறார் நஸ்ரியா!!!

13th of November 2013
சென்னை::னுஷுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்த நையாண்டி திரைப்படத்தினால் ஏற்பட்ட பிரச்சனைகள் முழுவதும் தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த ரசிகர்களுக்கு தெரிந்ததே.
 
தனுஷ்-நஸ்ரியா-இயக்குனர் சற்குணம் ஆகியோருக்கு இந்த பிரச்சனையில் தொடர்பு இருப்பது உண்மைதான். ஆனால் சில தினங்களாக நையாண்டி பிரச்சனையில் நடிகை நயன்தாரா தலையிட்டு நஸ்ரியாவிற்கு அறிவுரை கூறியதாகவும், அதற்கு நஸ்ரியா ‘உங்க வேலையை பாத்துகிட்டு போங்க’ என்று கூறியதாகவும் செய்திகள் உலவிவந்தன.
 
நஸ்ரியாவும் நயன்தாராவும் ராஜா ராணி திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பழக்கத்திலும், ஒரு சீனியர் நடிகை என்ற முறையிலும். ஒரே ஊர்க்கார பெண் என்ற உணர்விலும் இத்தகைய அறிவுரையை வழங்கியிருக்கலாம். அதற்காக அந்தப் பெண் அப்படியா முகத்தில் அடித்தது போல் பதில் சொல்வது’ என பேச்சுக்கள் வலம் வந்தன கோடம்பாக்கத்தில்.
 
இந்த செய்திகளை அறிந்த நஸ்ரியா இதுகுறித்து தனது ஃபேஸ்புக்  பதிவில் சில வதந்திகளைக் கேட்கும்போது கோபம் வருவதற்கு பதிலாக சிரிப்பு தான் வருகிறது. எனக்கு நயன்தாரா அறிவுரை கூறியதாகவும்,. அதற்கு நான் அவரை திட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்களுக்கு என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. நானும் நயன்தாராவும் நல்ல நண்பர்கள். நான் அடுத்ததாக டல்கூர் சலீமுடன்(மம்முட்டி மகன்) ’வாய்மூடி பேசவா’, ஃபஹாத் ஃபைசலுடன் 'Hi Iam Tony', ஜீவாவுடன் ‘நீ நல்லா வருவடா’ ஆகிய திரைப்படங்களில் நடிக்கவிருக்கிறேன். இந்த படங்கள் முடிந்ததும் இயக்குனர் செந்தில் இயக்கத்தில் தனுஷுடன்ஒரு படத்தில் நடிக்கிறேன். விஜய்யுடன் ஜோடியாக நடிக்க ஒரு படதிற்கு கேட்கப்பட்டதாக சொல்வது நடக்கவே இல்லை” என்று யாருக்குமே தெரியாத சில தகவல்களையும் கூறியிருக்கிறார்.
 
விஜய்யுடன் நடிக்க அப்ரோச் செய்யவில்லை’ என்று நஸ்ரியாவே  ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்ததைப் பார்த்த விஜய் ரசிகர்கள் ‘பப்ளிசிட்டி ஸ்டண்டுக்காக விஜய் பெயரை உபயோகிக்காதீர்கள். விஜய்யுடன் நடிக்க உங்களுக்கு தகுதி இல்லை’ என பல விதமாக தங்களது ஆதங்கத்தை பதிவு செய்துவருகின்றனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments