சென்னை பாக்ஸ் ஆபிஸ் - அம‌ர்க்களமான ஆரம்பம்!!!

5th of November 2013
சென்னை::அக்டோபர் 31 ஆரம்பம் வெளியான போதே மற்ற படங்களின் கலெக்சன் காலி. நவம்பர் 2ஆம் தேதி அழகுராஜா, பாண்டிய நாடு வெளியாக மற்றப் படங்கள் ஒரேயடியாக ஒட்டாண்டியாகிவிட்டன. நான்காம் ஐந்தாம் இடங்களைப் பற்றி பேச எதுவுமில்லை என்பதால் மூன்றிலிருந்து தொடங்குவோம்.
 
3. பாண்டிய நாடு

நவம்பர் 2ஆம் தேதி வெளியான படம் இரு தினங்களில் 38.12 லட்சங்களை வசூல் செய்துள்ளது. குறைவான திரையரங்குகளில் வெளியான காரணத்தால் இந்தளவு குறைந்த வசூலை பாண்டிய நாடு பெற்றுள்ளது. தீபாவளி படங்களில் இந்தப் படமே விமர்சகர்களின் பார்வையில் முன்னணியில் உள்ளதால் வசூல் வரும் நா‌ட்களில் அதிக‌ரிக்கலாம்.
 
2. அழகுராஜா

ராஜேஷின் இயக்கம் சந்தானம் செகண்ட் ஹீரோ என்பதால் திரையரங்குகளில் எள் விழாத கூட்டம். முதலிரண்டு தினங்களில் 1.12 கோடியை சென்னையில் வசூலித்துள்ளது (பாண்டிய நாடு படத்தின் காட்சிகளைவிட இதற்கு ஒரு மடங்கு காட்சிகள் அதிகம்). படம் சுமார் என்பதால் வருகிற நா‌‌ட்களில் வசூல் கணிசமாக குறைய வாய்ப்பிருக்கிறது.
 
2.ஆரம்பம்
 
இந்த வருடத்தின் டாப் ஓபனர். வியாழக்கிழமை வெளியான படம் முதல் நாளில் சுமாராக 1.49 கோடியை வசூலித்துள்ளது. வார இறுதியில்  வெள்ளி, சனி, ஞாயிறு  2.90 கோடிகள். அக்டோபர் 31 முதல் நவம்பர் 3 ஞாயிறு வரை நான்கு தினங்களில் 4.4 கோடிகளை படம் வசூலித்துள்ளது. அ‌ஜீத் படங்களில் இதுவே அதிகபட்ச ஓபனிங் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments