சாக்லேட் பாய் சித்தார்த்துக்கு பிடித்த பெண் யார்?!!!

25th of November 2013
சென்னை::சாக்லேட் பாய் சித்தார்த், சமந்தாவை காதலிப்பதாகவும், இருவரும், ஜோடி போட்டு வலம் வருவதாகவும், தொடர்ந்து, தகவல்கள் வெளியானாலும், இந்த விஷயத்தில், பிடி கொடுக்க மறுக்கிறார், சித்தார்த்.

அவரிடம், உங்களுக்கு பிடித்த பெண் எப்படி இருக்க வேண்டும்' என, சமீபத்தில் கேட்கப்பட்டது. எனக்கு பிடித்த பெண் என்பதை விட, நம் நாட்டை சேர்ந்த ஆண்களுக்கு எப்படிப்பட்ட பெண் பிடிக்கும் என, கூறுகிறேன் என, இதற்கும், நழுவலாகவே பதில் அளித்தார்.
 
அவர் கூறுகையில், நறுமணமிக்க பெண்களை, ஆண்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அதேபோல், கரடு, முரடாக இல்லாமல், மென்மையான பெண்ணாக இருக்க வேண்டும். எந்த ஒரு பெண், தன்னம்பிக்கையுடன் இருக்கிறாரோ, அந்த பெண், தன், வாழ்க்கை துணைக்கும், பெரும் பக்க பலமாக இருப்பார். குறும்புத் தனத்துடன் பேசும் பெண், மற்றவர்களை, எளிதில் கவர்வார் என, பெரிய பட்டியலே போடுகிறார், சித்தார்த்.
 
அவர் கூறிய விஷயங்கள் எல்லாம், சமந்தாவிடம் இருக்கும்போல் தெரிகிறது.   
     tamil matrimony_HOME_468x60.gif

Comments