11th of November 2013
சென்னை::ரசிகர்கள் தான் எனது தெய்வம்’ என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
வேலூரில் நடிகர் விஷால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
முக்கியமான படம்
தீபாவளிக்கு வெளிவந்துள்ள ‘பாண்டியநாடு’ திரைப்படத்தை நான் முதல்முறையாக தயாரித்துள்ளேன். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களுக்கும் சென்று ரசிகர்கள் முன்தோன்றி பேசி வருகிறேன். அதற்காக வேலூர் வந்துள்ளேன். இந்த படம் எனது வாழ்க்கையில் முக்கியமான பட
மாகும்.
இந்த படத்தில் எனக்கு நேர்மறையான கதாபாத்திரமாகும். தற்போது வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த படம் மேலும் 72 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் வெற்றி ஆகும்.
ரசிகர்களுக்கு நன்றி
இந்த வெற்றியை கொண்டாட ஏதாவது ஒரு டி.வி. முன்பு அமர்ந்து ரசிகர்களுக்கு நன்றி சொல்வதை விட்டு, விட்டு அவர்களை நேரில் சந்தித்து நன்றி சொல்ல இங்கு வந்துள்ளேன். ரசிகர்களின் கைதட்டல், விசில் தான் என்னை போன்றவர்களுக்கு பாராட்டு, வாழ்த்துக்கள். அதனை நேரில் காண வந்துள்ளேன்.
நான் அடுத்து திரு இயக்கத்தில் ‘நான் சிகப்பு மனிதன்’ என்ற படத்தில் நடிக்கிறேன். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11–ந் தேதி வெளிவருகிறது. ‘மதகஜராஜா’ படம் டிசம்பர் அல்லது பொங்கலுக்கு வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது டைரக்டர் சுசீந்திரன், எஸ்.பிக்சர் சீனிவாசன், அம்மா கிரியேஷன் சிவா உள்பட பலர் உடன் இருந்தனர்.
ரசிகர்கள் தான் தெய்வம்
பின்னர் வேலூரில் உள்ள பாண்டியநாடு சினிமா ஓடும் தியேட்டருக்கு நடிகர் விஷால் சென்று ரசிகர்கள் முன்பு பேசினார்.
அவர் பேசுகையில், நல்ல விஷயம் செய்யும் போது கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறுவார்கள். எனது ரசிகர்கள் தான் எனக்கு தெய்வம். அதனால் அடுத்த படத்துக்கு முன்பு உங்களை சந்திப்பதற்காக இங்கு வந்துள்ளேன். இந்த படம் வெற்றி அடைந்ததற்கும், ஜெயித்ததற்கும் நீங்கள் தான் காரணம். தியேட்டர்கள் திருமண மண்டபங்களாக மாறிவரும் வேளையில் இங்கு படம் பார்க்க நிறைய பேர் வந்துள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எந்த படமாக இருந்தாலும் திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காதீர்கள். தியேட்டருக்கு வந்து பாருங்கள். என்றார்.
முன்னதாக தியேட்டருக்கு வந்த விஷாலுக்கு ரசிகர்கள் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Comments
Post a Comment