இந்தி வாய்ப்பை தவறவிட்ட சீக்ரெட் பட புரமோஷன் நிகழ்ச்சிக்கு சம்பளம் கேட்ட அமலா பால்!!!

11th of November 2013
சென்னை::இந்தி வாய்ப்பை அமலா பால் தவற விட்டதற்கு காரணம் தெரியவந்துள்ளது.ரமணா பட ரீமேக்கான கப்பர் சிங்கில் அக்ஷய்குமார் நடிக்கிறார். தெலுங்கு பட இயக்குனர் கிரிஷ் இயக்குகிறார். இதில் அமலா பால் ஹீரோயினாக நடிக்க போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. அதில் அவரும் தேர்வாகிவிட்டார். ஆனால் திடீரென படத்திலிருந்து நடிக்காமல் சமீபத்தில் மும்பையிலிருந்து திரும்பி வந்தார். இதற்கு சம்பளம் அதிகம் கேட்டதுதான் காரணம் என தெரியவந்தது.
 
அவர் சம்பளம் அதிகம் கேட்க என்ன காரணம் என்ற தகவல் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.வழக்கமாக பாலிவுட் ஹீரோ, ஹீரோயின்கள் படத்துக்கு சம்பளம் வாங்கியதுடன் தனியாக ஒரே பேமென்ட் வாங்குவார்கள். அது, படத்தின் புரமோஷனுக்காக. படம் வெளியாவதற்கு ஒரு மாதம் முன்பே பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். ஊர் ஊராக சுற்றுவார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்கள் படங்களை புரமோட் பண்ணுவார்கள். கப்பர் சிங் படத்துக்காகவும் ஒரு மாதம் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமலா பாலுக்கு பட நிறுவனம் உத்தரவிட்டது.
 
ஆனால் அதற்காக தனியாக சம்பளம் தர முடியாது என கைவிரித்ததாம். இதற்கு காரணம், பாலிவுட்டில் அமலா புதுமுகம் என்பதுதான். வழக்கமாக புதுமுக நடிகைக்கு புரமோஷனுக்காக தனி சம்பளம் தரமாட்டார்கள். இந்த விதிமுறையை அமலா ஏற்கவில்லை. இதுவே அவர் பாலிவுட் வாய்ப்பை இழக்க காரணமாகிவிட்டது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments