சூ……………மூடிட்டு போடா” : ரசிகரை ‘அசிங்க’ அர்ச்சனை செய்த ஜிவி பிரகாஷ்குமார்!!!

8th of November 2013
சென்னை::என்னதான் ஒரு மேடையில் திறமைசாலிகள் புன்னகையோடு ரசிகர்களை சந்தித்துக் கொண்டாலும் நிஜத்தில் அவர்களுடைய செயல்கள் முகம் சுழிக்க வைப்பதாகத் தான் உள்ளது.
 
அப்படித்தான் அட இந்த பூனையும் பால் குடிக்குமா..? என்று சமத்துப் பிள்ளையாக தமிழ்சினிமாவில் வலம்வரும் மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஒரு ரசிகரை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
டைரக்டர் ஷங்கரின் தயாரித்த வெயில் படத்தில் மியூசிக் டைரக்டராக அறிமுகமானவர் தான் ஜி.வி பிரகாஷ்குமார். முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து பிரபலமாகி விட்டாலும் அதற்கடுத்தடுத்த அவரது இசையில் வந்த படங்களில் ஜி.வி.யின் இசை என்பது அப்படி ஒன்றும் விசேஷமாக இருந்ததில்லை என்பதே பொதுவாக இருக்கும் கருத்து.
 
இது ஜி.வியின் இசை என்பதை ஒரு படத்தின் போஸ்டரில் அவருடைய பெயரைப் பார்க்காமலேயே அந்தப்பாடலை கேட்கும் போது தெரிந்து கொள்ளலாம். அந்தளவுக்கு தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக இசையமைப்பது தான் தான் அவரது திறமைக்கு சான்றாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல் அவருடைய இசையில் ஹிட்டான பாடல்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். சமீபத்தில் ரிலீசான விஜய்யின் ‘தலைவா’ படத்தில் கூட ஒரு ஹிட் பாடலை அவரால் தர முடியவில்லை. அந்தளவுக்கு வறட்சியாக இருக்கும் அவரது இசைத் திறமைக்கு மேலும் வலு சேர்க்க மற்றவர்களின் ட்யூன்களை காப்பியடிக்க ஆரம்பித்து விட்டார் ஜி.வி என்பது தான் ரசிகர்கள் வைக்கும் குற்றச்சாட்டு.
 
ஆனால் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களின் கண்களில் மண்ணைத் தூவலாம், அந்தப் பாடல்களை கேட்கும் கட்டாய நிலைமைக்கு தள்ளப்படும் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன?
அப்படித்தான் ஒரு ரசிகர் ஜி.வியிடம் “நீங்க மத்தவங்களோட ட்யூன்களை காப்பியடிச்சி பாட்டு போடுறீங்க..?” என்ற உண்மையைச் சொல்லியிருக்கிறார்.
அதற்கு ஒரு பிரபல இசையமைப்பாளராக ஜி.வி என்ன சொல்லியிருக்க வேண்டும்?
 
நான் அப்படியெல்லாம் செய்யல, இருந்தாலும் உங்களுக்கு அப்படி தோணுச்சின்னா கண்டிப்பா நான் என்னோட ஸ்டைல் ஆப் மியூசிக்கை மாத்திக்கிறேன்” என்று தானே சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் ஜி.வி அப்படி சொல்லவில்லை. மாறாக “சூ…………………மூடிட்டு போடா” என்று அந்த ரசிகரை சகட்டு மேனிக்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருக்கிறார். அதோடு என்னோட பாடல்கள் தான் தொடர்ந்து 12 வாரமா ஹிட் சாங்ஸ் லிஸ்ட்ல இருக்கு என்றும் தெம்பாக கூறியிருக்கிறார்.
திறமை இருக்கிற இடத்துல கொஞ்சம் திமிரும் இருக்கலாம் தப்பில்லை. ஆனா அதுக்கும் ஒரு எல்லையிருக்கிறது. இதை உணர்வாரா ஜி.வி.பிரகாஷ்?
tamil matrimony_HOME_468x60.gif

Comments