ஹீரோயின் செருப்பு வீச்சு ஹீரோ அலறல் பிரபுதேவா ஷூட்டிங்கில் பரபரப்பு!!!

13th of November 2013
சென்னை::மும்பை:பிரபுதேவா ஷூட்டிங்கில் ஹீரோயின் சோனாக்ஷி சின்ஹா ஹை ஹீல்ஸ் செருப்பை கழற்றி வீசியதில் ஹீரோவுக்கு படாத இடத்தில் அடிபட்டது. இதனால் அவர் அலறி துடித்தார்.
 
பாலிவுட் படவுலகில் இயக்குனர் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் பிரபுதேவா. பிரபல நடிகர்கள் அவரது இயக்கத்தில் நடிக்கவும், கேட்டால் உடனடியாக கால்ஷீட் தரவும் தயாராக இருக்கின்றனர். தற்போது ஆர் ராஜ்குமார் படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா.
 
இதில் ஷாஹித் கபூர் ஹீரோ. சோனாக்ஷி சின்ஹா ஹீரோயின்.சமீபத்தில் இதன் ஷூட்டிங் மும்பையில் உள்ள ஸ்டுடியோவில் நடந்தது. ஷாஹித், சோனாக்ஷி லவ் டூயட் படமாக்கப்பட்டது. ஒரு காட்சியில் செல்லமாக கோபப்படும் சோனாக்ஷி தனது காலில் அணிந்திருக்கும் ஹை ஹீல்ஸ் செருப்பை கழற்றி ஷாஹித் மீது வீசுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டது. கேமரா சுழல தயாரானதும் ‘ஆக்ஷன் என்றார் பிரபுதேவா.
 
சோனாக்ஷி ஹை ஹீல்சை கழற்றி ஷாஹித் மீது அதி வேகமாக வீசினார். அது தவறுதலாக, ஷாஹித்துக்கு படக்கூடாத இடத்தில் பட்டது. வலி தாங்க முடியாமல் அலறிய ஷாஹித், அப்படியே உட்கார்ந்துகொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபுதேவா ஓடிவந்து அவரை தேற்றினார். இதனால் அதிர்ச்சியான சோனாக்ஷி ஷாஹித்திடம் ஸாரி கேட்டார். சில நிமிட ஓய்வுக்கு பிறகு ஷூட்டிங் தொடர்ந்தது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments