6th of November 2013
சென்னை::மூத்த ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று பேட்டி அளித்து சர்ச்சையில் சிக்கினார் காஜல் அகர்வால். அடுத்து அதிக சம்பளம் கேட்டதால் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்காமல் ஹீரோக்கள் ஒதுக்கினார்கள். இந்த பிரச்னையிலிருந்து தற்போதுதான் மீண்டு வந்திருக்கிறார் காஜல். தற்போது மற்றொரு பிரச்னையில் சிக்கி இருக்கிறார்.
சமீபத்தில் மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்த காஜலிடம், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் தற்போது ஓய்வு பெற வேண்டும் என்றால் யார் பெயரை சொல்வீர்கள்? என்றதற்கு உடனடியாக ஸ்ரேயா பெயரை குறிப்பிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மழை படம் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா, ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். காஜலின் கருத்து பற்றி அறிந்து ஸ்ரேயா அதிர்ச்சி அடைந்து இருக்கிறாராம். -

Comments
Post a Comment