ஆல் இன் ஆல் அழகுராஜா காலை வாரி விட்டதால் பேரதிர்ச்சி: விருந்துக்கு தயாராகிறது பிரியாணி!!!

14th of November 2013
சென்னை::பருத்திவீரன் நடிகர் நூற்றுக்கு நூற்றி ஐம்பது சதவிகிதம் நம்பியிருந்த ஆல் இன் ஆல் அழகுராஜா காலை வாரி விட்டதால் பேரதிர்ச்சியில் இருக்கிறார். தொடர் தோல்விகளை தழுவி வரும் அவரை தேற்றும் வகையில், ஓரங்கட்டி வைத்த பிரியாணியை பரிமாற தயாராகி வருகிறார்களாம்.
 
மேலும், அழகுராஜா ஓடி முடித்த பிறகு ஜனவரி மாதத்தில் அந்த படத்தை வெளியிட வேண்டும் என்று முன்பே முடிவெடுத்திருந்தனர். ஆனால், இப்போது அப்படம் திரையிட்ட சில நாட்களிலேயே தியேட்டர்களை விட்டு ஓட்டம் பிடித்து விட்டதால், பிரியாணியை உடனடியாக களமிறக்கும் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளனர். அதனால் டிசம்பரிலேயே படம் ரசிகர்களை சந்திக்க வருகிறதாம். இதனால் கிட்டத்தட்ட பிரியாணியை தான் கிண்டி வைத்திருப்பதையே மறந்து விட்ட வெங்கட்பிரபு, மீண்டும் பிரியாணியை சூடு பண்ணி சுவை குறையாமல் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க தயாராகி வருகிறார்.

இந்நிலையில், ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திற்கு முன்பே தயாரான பிரியாணியை தாமதமாக வெளியிடுவது பற்றி விசாரிக்கையில், பிரியாணியில் நிறைய கிராபிக்ஸ் வேலைகளில் இருந்தது அதனால்தான் ஜனவரியில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருந்ததாகவும், இப்போது அந்த வேலைகளில் முன்கூட்டியே முடிந்து விட்டதால் டிசம்பரில் திரைக்கு கொணடு வருவதாகவும் கூறுகிறார்கள்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments