11th of November 2013
சென்னை::இம்மாதம் திரைக்கு வரப்போகிறது இரண்டாம் உலகம் படம். செல்வராகவனின் படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகும் படம் என்று மார்தட்டிக் கூறிக் கொள்ளலாம் இப்படத்தை. ஒரு உலகத்தில் வசிக்கும் காதலர்கள் வேறொரு உலகத்தில் சந்திப்பதுதான் இப்படத்தின் மையக்கரு என்கிறார்கள்.
இந்த படத்திற்காக, காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து உதவியிருக்கிறார் அனுஷ்கா. தனது பேட்டியில் என்னுடைய தங்கை கூட என்னை இப்படி பார்த்துக் கொண்டதில்லை. ஒரு தங்கை ஸ்தானத்தில் இருந்து அனுஷ்கா என்னை பார்த்து கொண்டார் என்று செல்வராகவன் கூறியிருப்பதை ஆச்சர்யத்தோடு கவனிக்க முடிகிறது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தை போல சற்றே விஞ்ஞானம், கலை, வரலாறு, காதல் என்று பிரித்து மேய்ந்திருக்கிறாராம் செல்வராகவன். இப்பவே படத்தின் சேட்டிலைட் ரைட்சுக்கு முன்னணி சேனல்கள் போட்டியிடுகின்றன. யாருக்கு விலை படிகிறதோ, அவர்களுக்கு படத்தை கொடுப்பதுதானே லாஜிக்?
அந்த வகையில் இந்த படத்தை பெயரை வி -ல் ஆரம்பிக்கும் சேனல் தட்டிச் செல்லும் என்கிறார்கள் திரையுலகத்தில். பார்க்கலாம்...
Comments
Post a Comment