4th of November 2013
சென்னை::கனவு காணுங்கள் என்ற அப்துல் கலாமின் வார்த்தைகளை யார் பின்பற்றுகிறார்களோ இல்லையோ, கமல் பின்பற்றுகிறார். அவரின் சமீபத்திய கனவு ஆயிரம் கோடிகள்.
ஃபிக்கி அமைப்பின் தலைவராக இருக்கும் கமல், சினிமா வருவாயை எந்தெந்த ஊற்றுகளிலிருந்து பெற முடியும் என்பதை தொடர்ந்து யோசித்து வருகிறார்.
இந்தியாவைவிட...
பல மடங்கு மக்கள் தொகை குறைந்த அமெரிக்காவில் ஒரு படம் முதல் மூன்றே தினங்களில் ஐநூறு கோடியை வசூலித்து விடுகிறது. ஐம்பது கோடியெல்லாம் சாதாரணம். எனில் இந்நியாவில் மட்டும் ஏன் முடியாது?
பதில் எளிமையானது. அமெரிக்கா முழுக்க ஆங்கிலம் பேசுகிறார்கள். இங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மொழி.
என்றாலும் நூறு கோடி பார்வையாளர்கள் உள்ள இந்தியாவில் 1000 கோடி வசூலிப்பது அப்படியொன்றும் முடியாத விஷயமில்லை என கமல் தெரிவித்துள்ளார். அதற்கான வழிகளை அவர் விஸ்வரூபம் 2 வில் நடைமுறைப்படுத்தக்கூடும்.
Comments
Post a Comment