எதிர்ப்பை மீறி ‘வடகறி’ தமிழ் படத்தில் ‘செக்ஸ்’ பட நடிகை சன்னி லியோன் நடனம்!!!

27th of November 2013
சென்னை::அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் ‘சன்னி லியோன்’ இவர் நடித்த நீலப்படங்களுக்கு வெளிநாடுகளில் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சன்னிலியோன் ‘ஜிஸ்சம் 2’ என்ற இந்தி படத்தில் அறிமுகமானவர். தற்போது ‘ஜாக்பாட்’ என்ற இந்தி படத்தில் பரத்துடன் நடிக்கிறார்.

இவரை தயாநிதி அழகிரி தயாரிப்பில் ஜெய், சுவாதி ஜோடியாக நடிக்கும் ‘வடகறி’ தமிழ்படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட வைக்க முயற்சிக்கிறார். இதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், சன்னி லியோன் போன்ற நீலப்பட நடிகைகளை அனுமதித்தால் தமிழ்நாடு நீலப்பட நடிகைகள் சுதந்திரமாக நடமாட வசதியாகி விடும். நீலப்படங்கள் தவறானதல்ல என்ற கருத்தும் உருவாகிவிடும். இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல தமிழ் கலாச்சாரத்துக்கே முரணாகி விடும். ஒருபோதும் சன்னிலியோன் தமிழ்படத்தில் நடிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.

ஆனால் எதிர்ப்பை மீறி சன்னிலியோன் ‘வடகறி’ படத்தில் நடனம் ஆடுகிறார். இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் டான்ஸ் மாஸ்டர் கல்யாண் இந்த நடன காட்சிகளை எடுக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சரவணராஜன் இப்படத்தை இயக்குகிறார்.
tamil matrimony_HOME_468x60.gif

 

Comments