19th of November 2013
சென்னை::சீனி கம், பா படங்களை இயக்கிய பால்கி என்கிற பாலகிருஷ்ணன் அடுத்தப் படத்தை இயக்குகிறார். முதலிரு படங்களில் இடம் பெற்ற பி.சி.ஸ்ரீராம், இளையராஜா, அமிதாப்பச்சன் மூவரும் இதிலும் இருக்கிறார்கள்.
இவர்களைத் தவிர யார்? அதுதான் சுவாரஸியமான குழப்பம்.
கமல் - சரிகா தம்பதியின் இளைய மகள் அக்சரா ஹாசன் பால்கியின் படத்தில் அறிமுகமாவதாக வதந்தி உள்ளது. அதேபோல் தனுஷை நடிக்க வைக்கும் முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது. இவையிரண்டும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து வந்ததால் கோடம்பாக்கம் நகத்தைக் கடித்துக் காத்திருக்கிறது.
வேறெதற்கு... அக்சராவை தங்கள் படத்தில் நடிக்க வைக்கதான் இந்த வெயிட்டிங்.
Comments
Post a Comment