19th of November 2013
சென்னை::தொடர் வெற்றி ஹீரோயின், ராசியான ஹீரோயின் என்று தமிழ் சினிமாவில் பெயர் எடுத்துள்ளார் நடிகை லட்சுமி மேனன். இவர் நடிப்பில் வெளியான கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி ஆகிய மூன்று படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது சமீபத்தில் வெளியான 'பாண்டிய நாடு' படமும் பெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில், பாண்டிய நாடு படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக கோயம்புத்தூர் வந்த நடிகை லட்சுமி மேனன், நிருபர்களிடன் பேசுகையில், "நான் ஒரு நடிகையாக வருவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. ஆனால், இப்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறேன். இது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. நான் என்னை எந்த நடிகைகளுடனும் ஒப்பிட மாட்டேன். எனக்கு இனை நானேதான்.
நான் எப்போதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். அதே சமயம் ஆக்ஷன் படங்களிலும் நடிக்க மாட்டேன். தற்போது பிளஸ் 1 படிக்கும் நான், குறைந்தது பட்டப்படிப்பாவது முடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்." என்றார்.

Comments
Post a Comment