லட்சுமிமேனனுடன் காதலா?: விஷால் பதில்!!!

14th of November 2013
சென்னை::விஷால் ஜோடியாக ‘பாண்டிய நாடு’ படத்தில் லட்சுமிமேனன் நடித்தார். அடுத்து ‘நான் சிவப்பு மனிதன்’ படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். ‘பாண்டியநாடு’ படம் வெற்றிகரமாக ஓடுவது குறித்து விஷால் சென்னையில் பேட்டி அளித்தார்.

அப்போது மேடையில் விஷாலும் லட்சுமிமேனனும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற படத்தை சுட்டிக்காட்டி இருவரும் காதலித்தீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த விஷால், எனக்கும் லட்சுமி மேனனுக்கும் அப்படி எதுவும் இல்லை. படம் லட்சுமிகரமாக இருந்ததால் மேடையில் வைத்தோம். நான் திருமணத்துக்கு தயார் ஆகவில்லை. திருமணத்துக்கான முதிர்ச்சி இன்னும் வரவில்லை என்றார்.

மேலும் விஷால் கூறியதாவது:–

சினிமாவுக்குள் வரும் போது நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தேன். டைரக்டர் ஆகத்தான் நினைத்தேன். எதிர்பாராமல் ‘செல்லமே’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் வெற்றி பெற்றதால் நடிப்பது நிரந்தரமாகி போனது.

‘பாண்டிய நாடு’ நான் தயாரித்த முதல் படம். இது வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 72 தியேட்டர்களில் தற்போது அதிகமாக ரிலீஸ் செய்துள்ளனர். பெரிய தியேட்டர்களுக்கும் மாற்றி இருக்கிறார்கள். டிசம்பர் 15–ந் தேதி வரை தியேட்டர்களில் இப்படம் ஓடும் என்று உறுதியளித்துள்ளனர்.

இந்த படம் என் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாகி விட்டது. படத்தில் என் தந்தையாக பாரதிராஜா நடித்துள்ளார். அவரை பார்க்கும் போது என் அப்பா ஞாபகம் வரும் லட்சுமிமேனன் தொடர்ந்து 4 வெற்றி படங்களில் நடித்துள்ளார். விக்ராந்துக்கும் முக்கியமான கேரக்டராக அமைந்தது.

டைரக்டர் சுசீந்திரன் சொல்லி கொடுத்தபடியே நடித்தேன். இதை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. ‘மதகஜராஜா’ படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் கஷ்டப்பட்டேன். விஜயகாந்த் ஆறுதல் வார்த்தை கூறினார்.

ரசிகர்கள் என்னை புரட்சி தளபதி என அழைத்ததால் அந்த பட்டம் பெயரோடு இணைக்கப்பட்டது. அரசியலில் ஈடுபடும் நோக்கோடு அதை வைக்கவில்லை. பிறகு அந்த பட்டம் தேவை இல்லை என்று பட்டதால் நீக்கிவிட்டேன்.

இவ்வாறு விஷால் கூறினார்.

டைரக்டர் பாரதிராஜா பேசும்போது, 1964–ல் நடிகனாக வேண்டும் என்று தான் சென்னை வந்தேன். ஆனால் டைரக்டராகி விட்டேன். ‘கல்லுக்குள் ஈரம்’, ‘இரட்டை சுழி’ என சில படங்களில் விருப்பம் இல்லாமல் நடித்தேன். அதன் பிறகு நடிக்கவே கூடாது என்று ஒதுங்கினேன். சுசீந்திரன் வற்புறுத்தி ‘பாண்டிய நாடு’ படத்தில் நடிக்க வைத்தார், என் நடிப்பை பார்த்து நிறைய பேர் பாராட்டுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
 
tamil matrimony_HOME_468x60.gif

Comments