மாத்திரை சாப்பிட சமந்தா அட்வைஸ் - கடுப்பானார் சித்தார்த்!!!

13th of November 2013
சென்னை::நேரத்துக்கு மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்ளுமாறு டுவிட்டரில் சமந்தா அட்வைஸ் செய்ததால் கடுப்பாகிப் போனார் சித்தார்த். சித்தார்த், சமந்தா காதலிக்கின்றனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்று கோலிவுட், டோலிவுட்டில் பேசப்படுகிறது. இந்த பேச்சு எழுந்த பிறகு இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டனர். ஆனால் இருவரும் காதல் தொடர்பான மீடியாவின் கேள்விகளுக்கு பதில் தரவில்லை. வெளிப்படையாக காதலை தெரிவித்தால் பட வாய்ப்புகள் வராது என்று சமந்தாவுக்கு நெருக்கமானவர்கள் அட்வைஸ் தந்தனர். இதையடுத்து காதல் விவகாரம் பற்றி வெளிப்படையாக பேசுவதை நிறுத்திக்கொண்டார்.

ஆனால் சித்தார்த்துடன் அவர் இணைய தளம் மூலம் காதலை வளர்த்து வருகிறார். அடிக்கடி அவரிடம் நலம் விசாரித்து அறிகிறார். சமந்தாவுக்கு சித்தார்த் ‘பாபிÕ என்று செல்லப் பெயர் வைத்திருக்கிறார். இணைய தளத்திலும் இப்படித்தான் அவரை குறிப்பிடுகிறாராம். சமீபத்தில் சித்தார்த்திடம் இணையதளத்தில் கருத்து பரிமாறிக்கொண்ட சமந்தா, உடல் நலனை நன்கு கவனித்துக்கொள்ளவும், சரியான நேரத்துக்கு மருந்து மாத்திரை உட்கொள்ளவும் என்று பரிவுடன் பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இது சித்தார்த்துக்கு கடுப்பை ஏற்றி உள்ளது. காரணம், டுவிட்டரில் சமந்தாவின் அறிவுரையை படித்த திரையுலகினர் சிலர், சித்தார்த்துக்கு போன் செய்து உடல் நலம் விசாரிக்கிறார்களாம். உடம்புக்கு என்ன ஆச்சு, எதுக்கு மருந்து சாப்பிடுறீங்க? என கேட்கிறார்களாம். இதுதான் சித்தார்த்தின் கடுப்புக்கு காரணமாம். 
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments