நம்பாதீங்க... சினேகா கர்ப்பம் இல்லையாம்!!!

19th of November 2013
சென்னை::நடிகை சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என்கிற தகவல் உண்மை கிடையாது என்று பிரசன்னா விளக்கமளித்துள்ளார்.

நடிகை சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் தான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக். நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் நடிகை சினேகா சினிமாவில் நடிக்க அவரது கணவர் பிரசன்னா முழு சுதந்திரம் கொடுத்தார்.இதனால் சினேகா தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சினேகா கர்ப்பமாகியிருக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது. மேலும் அவர் குழந்தை பிறந்து 2 வயது ஆகும் வரை எந்த படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ளமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த தகவலை நடிகரும் சினேகாவின் கணவருமான பிரசன்னா மறுத்துள்ளார். "அப்படி ஒரு சுபச்செய்தி இருந்தால் எங்கள்மீது எப்போதும் அன்பு காட்டிவரும் பத்திரிக்கையாளர்களை அழைத்துத்தான் முதலில் பகிர்ந்துகொள்வோம்” என தனது டுவிட்டர் இணையதளத்தின் மூலமாக தெளிவுபடுத்தியுள்ளார். இந்த செய்தியை யார் கொளுத்திப்போட்டார்களோ தெரியவில்லை.
tamil matrimony_HOME_468x60.gif

Comments