திருக்குறளை பாடல்களாக மாற்றிய பரத்வாஜ்!!!

15th of November 2013
சென்னை::பிரபல இசையமப்பாளர் பரத்வாஜ், புதிய முயற்சியாக 1330 திருக்குறள்களுக்கும் இசையமைத்துப் பாடல்களாக உருமாற்றியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள பரத்வாஜ், இந்த முயற்சிக்காக கடந்த 4 வருடங்களாக எந்த படங்களுக்கும் இசையமைக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கூறிய இசையமைப்பாளர் பரத்வாஜ், "அறத்துப்பால் – பொருட்பால் – காமத்துப்பால் என மூன்று பாகங்களைக் கொண்ட திருக்குறளை மூன்று விதமான விதங்களில் இசையமைத்து இருக்கிறேன்.

அறத்துப்பால் இசை ஒரு மாதிரி, பொருட்பால் இசை இன்னொரு மாதிரி, காமத்துப்பால் இசை இன்னொரு மாதிரி என்று வேறுபடுத்தி இருக்கிறேன்.

இதற்காக உலகம் முழுக்க உள்ள எல்லா நாட்டு தமிழ் பாடகர்களையும் பாட வைத்திருக்கிறேன். இங்கே நமக்கு பரிச்சயமான எல்லா பாடகர்களும் பாடி இருக்கிறார்கள் மொத்தம் 500 பாடகர்கள் பாடி இருகிறார்கள்.

எந்த தலை முறையினருக்கும் திருக்குறள் தேவைப்படுகிற ஒன்று. வார்த்தையால் சொல்வதை இசை மூலம் எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டேன். இதற்காக 12 நாடுகளுக்கு சென்று பாடகர்களை பாட வைத்தேன்." என்றார்.

திருவள்ளுவர் தினமான ஜனவரி 17ஆம் தேதி, இந்த திருக்குறள் பாடல்களை வெளியிட பரத்வாஜ் முடிவு செய்துள்ளார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments