28th of November 2013
சென்னை::ஷூட்டிங்கில் பங்கேற்ற வேதிகா, நீருக்குள் மூழ்கி தவித்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரதேசி படத்தில் நடித்தவர் வேதிகா. அவர் கூறியதாவது:
மலையாளத்தில் சிங்காரவேலன் என்ற படம் மூலம் அறிமுகமாகிறேன். இப்படத்துக்காக பெரிய தொட்டியொன்றில் நிரப்ப பட்டிருக்கும் நீருக்குள் என்னை தூக்கி வீசுவதுபோல் காட்சி படமாக்கப்பட்டது. நீருக்குள் நான் வீசப்பட்டதும் உடனடியாக எழுந்து நின்றுகொள்ளும்படி கேமராமேன் கூறினார். அதன்படி நீரில் நான் வீசப்பட்ட உடன் எழுந்து நின்றேன். ஆனால் கான்கிரீட் தரை திடீரென்று உடைந்துவிட்டது. இதனால் நான் நீருக்குள் மூழ்கினேன்.
உடனடியாக யூனிட்டில் இருந்த உதவியாளர்கள் பாய்ந்துவந்து என்னை காப்பாற்றினார்கள். பிறகுதான் அந்த கான்கிரீட் சுவர் இரண்டு நாட்களுக்கு முன்புதான் கட்டப்பட்டது என்று தெரிந்தது. அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து உயிர் தப்பினேன். இந்த தொட்டி ஒரு கட்டிடத்தின் விளிம்பில் கட்டப்பட்டிருந்தது. இப்போது அந்த சம்பவத்தை நினைத்தாலும் எனக்கு நடுக்கம் வந்துவிடுகிறது என்றார். படக்குழுவினரின் அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என வேதிகாவுக்கு நெருங்கியவர்கள் புகார் கூறியுள்ளனர்.

Comments
Post a Comment