மம்முட்டி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் விஜய்

30th of November 2013
சென்னை::நடிகர் விஜயின் படங்களுக்கு தமிழகத்தில் மட்டும் இன்றி கேரளாவிலும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கிடையில், விஜய் தற்போது நடித்து வரும் ஜில்லா படத்தில் மலையாள சூப்பர் ஸ்டாரிகளின் ஒருவரான மோகன்லால் இணைந்து நடிக்கிறார்.

இதனால், விஜய்க்கு தற்போது கேரளாவில் இன்னும் மவுசு கூடியுள்ளது. இது போதது என்று இன்னும் தனது மவுசை கூட்ட நினைத்துள்ள விஜய், மம்முட்டி நடிக்கும் மலையாளப் படத்தில், அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மம்மு நடித்து வரும் 'தி கேங் ஸ்டார்' என்ற படத்தில் தான் விஜய் நடனம் ஆடப்போகிறாராம். விஜய் நடனம் ஆட வேண்டும் என்று மம்முட்டி தான் விரும்பினாராம். பிறகு இது குறித்து விஜயிடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளதாம்.

ஏற்கனவே அக்ஷய் குமார் நடித்த இந்திப் படத்தில் விஜய் ஒரு பாடலில் தோன்றி நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments