3rd of November 2013
சென்னை::தீபாவளியை முன்னிட்டு ஜில்லா படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய, மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், பரோட்டா சூரி, என நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ள திரைப்படம் ஜில்லா. அரசியல், பஞ்ச் என எதுவும் இல்லாமல் குடும்ப பொழுதுபோக்குப் படமாக உருவாகி வருகிறது.
படத்தில் விஜய்க்கு காவல்துறை அதிகாரி வேடம். படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்துக்காக விஜய், ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார். படத்தின் இசையை டிசம்பரில் ஸ்டார் மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. மதுரையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில், பெரும்பாலான காட்சிகளை கிட்டத்தட்ட எடுத்து முடித்துவிட்டார்களாம். பாடல்கள் காட்சிகள் மட்டும் தான் இன்னும் பாக்கி இருக்கிறதாம்.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஜில்லா படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஜய் மலர் மாலைகளுடன் ரூபாய் நோட்டு மாலைகள் அணிந்து கெத்தாக தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. தலைவா படமானது விஜய் ரசிகர்களுக்கு போதுமான திருப்தி அளிக்காததால் ஜில்லாவிற்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பொங்கல் ஜல்லிகட்டாக ஜில்லா படம் திரைக்கு வருகிறது.

Comments
Post a Comment