நடிகர் கிருஷ்ணாவுக்கு திருமணம்!!!

19th of November 2013
சென்னை::கற்றது களவு, அலிபாபா, கழுகு ஆகியப் படங்களில் ஹீரோவாக நடித்தவர் கிருஷ்ணா. பிரபல தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் இளைய மகனும், இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியுமான கிருஷ்ணா, தற்போது 'வானவராயன் வல்லவராயன்', 'விழித்திரு', 'இல்ல ஆனாலும் இருக்கு', 'வன்மம்' ஆகியப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

நடிகர் கிருஷ்ணாவுக்கும் கோவையை சேர்ந்த ரங்கநாதன் – வாசுகி தம்பதியரின் மகள் கைவல்யாவுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இவர்களது திருமண நிச்சயதார்த்த விழா நவம்பர் 20 (இம்மாதம்)ஆம் தேதி புதன் மாலை 6  மணியளவில் கோவை ஜெனீஸ்  கிளப்பில் நடைபெற உள்ளது.

திருமணம் 2014ஆம் ஆண்டு, பிப்ரவரி 6ஆம் தேதியன்று கோவையில் நடைபெறுகிறது.திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற உள்ளது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments