நயன்தாராவுடன் சிம்பு ஜோடியாக நடிப்பதையறிந்து ஹன்சிகா அதிர்ச்சி!!!

21st of November 2013
சென்னை::நயன்தாராவுடன் சிம்பு ஜோடியாக நடிப்பதையறிந்து ஹன்சிகா அதிர்ச்சி அடைந்தார். சிம்புவுடன் அவர் காதலை முறித்துக்கொண்டதற்கு இதுதான் காரணமாம். சிம்புவுடன் காதல் பிரிவுக்கு பிறகு பிரபுதேவாவுடன் பழகத் தொடங்கினார் நயன்தாரா. அந்த காதலும் முறிந்ததையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் சிம்புக்கும், ஹன்சிகாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் இணையதளம் மூலம் தங்கள் காதலை உறுதி செய்தனர். இந்நிலையில் பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை தேர்வு செய்திருக்கிறார்கள். நேற்றுமுன்தினம் நயன்தாராவுக்கு பிறந்த நாள்.

அவரை தொடர்புகொண்ட சிம்பு, பிறந்தநாள் வாழ்த்து கூறியதுடன் தனது படத்தில் நடிக்க கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக நயன்தாரா அதற்கு சம்மதம் தெரிவித்தாராம். இந்த தகவல் ஹன்சிகாவுக்கு தெரிய வந்ததால் அவர் கோபம் அடைந்தார். சிம்புவை காதலிக்காதே என்று அப்போதே பலர் என்னிடம் கூறினார்கள். நான்தான் கேட்கவில்லை.

இப்போது அவரை பற்றி தெரிந்துகொண்டேன் என்று வருத்தப்பட்டதுடன் தனது தரப்பிலிருந்து, சிம்புவுடன¢ காதல் முறிந்தது என்ற தகவலை பரவவிட்டாராம். ஆனால் சிம்பு தரப்பில் கூறும்போது,ஹன்சிகாவை சிம்பு பிரியவில்லை என்று சொல்லி வருகிறார்கள்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments