5th of November 2013
சென்னை::தனுசுடன் நடித்த, வேங்கை படத்திற்கு பின், தமன்னா நடித்த படம் எதுவும் ரீலிசாகவில்லை. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின், அஜித்துடன் அவர் நடித்து வரும், வீரம்' படம், பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதனால், என் இரண்டாவது, இன்னிங்சிலும், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று சொல்லும் தமன்னா, ஏற்கனவே தன்னை வைத்து படம் எடுத்த, மேலும் சில டைரக்டர்களிடமும், வாய்ப்பு கேட்டு அப்ளிகேஷன் போட்டு வருகிறார்.
அதேபோல், இந்தியிலும், 'ஹிம்மத்வாலா படத்தின் இயக்குனரே அக் ஷய் குமார் நடிக்கும் புது படத்துக்கு தன்னை இப்போது, 'புக்' செய்திருப்பதால், தன் அபிமானத்திற்குரிய, அத்தனை 'மாஜி' டைரக்டர்களையும், மீண்டும் சந்தித்து, அதிரடி பட வேட்டையில் இறங்கியுள்ளார் தமன்னா. வாய்ப்புக்காக தமன்னா அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருப்பது, தமிழில் தற்போது முன்னணியில் உள்ள, மற்ற நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment