சிம்பு, ஆண்ட்ரியா ‘திடீர்’ நெருக்கம்?: ஹன்சிகா அதிர்ச்சி!!!

6th of November 2013
சென்னை::சிம்புவும் ஹன்சிகாவும் ஒருத்தரையொருத்தர் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டனர். இருவரும் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.

ஹன்சிகாவுக்காக தியாகராயநகரில் புதிதாக பிரமாண்ட பங்களா வீடு ஒன்றையும் சிம்பு கட்டி கிரஹப்பிரவேசமும் நடத்தினார். ஹன்சிகாவை உடனடியாக திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று சிம்பு விரும்பினார். ஹன்சிகாவோ ஐந்து வருடங்கள் கழித்தே திருமணம் செய்து கொள்வேன் என்றார். இதில்தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஹன்சிகா தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். சம்பளமும் அதிகம் வாங்குகிறார். திருமணம் நடந்தால் சினிமாவுக்கு முழுக்கு போடவேண்டி வரும் என்றும் சம்பாத்தியம் நின்று போகும் என்றும் ஹன்சிகாவின் தாயார் மோனா கருதினார். எனவே திருமணத்தை தள்ளிப்போடும்படி அவர் வற்புறுத்தியதாகவும் அதன்படியே ஐந்து வருடத்துக்கு பிறகே சிம்புவுடன் திருமணம் நடக்கும் என்றும் ஹன்சிகா பேட்டி அளித்தார்.

இதனால் வருத்தத்தில் இருந்த சிம்பு, வி.டி.வி.கணேஷ், மீராஜாஸ்மின் ஜோடியாக நடிக்கும் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் கவுரவ தோற்றத்தில் சில காட்சிகள் நடித்தார். இதில் சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்தார்.

அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிம்புவும் ஆண்ட்ரியாவும் ஒட்டி உரசி இருப்பதுபோன்ற படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. படப்பிடிப்பில் இருவருக்கும் ‘கெமிஸ்ட்ரி’ பிரமாதமாக இருந்ததாக வி.டி.வி.கணேஷ் வலிய கருத்து வெளியிட்டு இருந்தார்.

இதனால் சிம்புவுடனான தொடர்பை ஹன்சிகா துண்டித்து விட்டதாக செய்தி பரவி உள்ளது. சிம்பு, ஆண்ட்ரியா நடமாட்டத்தை ஆள் வைத்து அவர் வேவு பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments