இயக்குநருக்கு நஷ்டஈடு, ஸ்டண்ட் மாஸ்டருக்கு வழக்கு - அஞ்சலி முடிவு?!!!

6th of November 2013
சென்னை::ஆந்திரா பக்கம் ஒதுங்கினாலும், கோடம்பாக்கத்தில் அஞ்சலி அலை ஓயாது போலிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் ஆரம்பித்த அஞ்சலி அலை, தற்போது கோடம்பாக்கத்தில் சூறாவளியாக மாறியுள்ளது.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 'வலியுடன் ஒரு காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் மு.களஞ்சியம், தனது ஊர்சுற்றி புராணம் படத்தில் நடித்த அஞ்சலி, பாதியில் அதை விட்டுவிட்டு ஓடிவிட்டார். அதனால், தனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இந்த பிரச்சனை குறித்து அனைத்து சங்கங்களிலும் முறையிட்ட பிறகும் எனக்கு நியாயம் கிடைக்கவிவில்லை என்று பேசினார்.

அவரையடுத்து பேசிய தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினரும், ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாக்குவார் தங்கம், இனி அஞ்சலி போல யாராவது தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட்டம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டால் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். அஞ்சலி எங்கிருந்தாலும், அவரை தூக்கிட்டு வந்து, அந்த படத்தில் நடிக்க வைப்போம். இல்லையெனில், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்ட்டத்திற்கு ஈடாக அவரிடம் இருந்து பணத்தை வாங்கித்தருவோம் என்று கூறினார்.

ஜாக்குவார் தங்கத்தின் இந்த பேச்சு ஐதராபாத்தில் இருக்கும் அஞ்சலியின் காதுக்கு அனுப்பப்பட்டதாம். இதை கேட்ட, அவர் எந்த சம்மந்தமும் இல்லாத அவர் ஏன், என்னை செருப்பால் அடிக்க வேண்டும் என்று கோபப்பட்டாராம். அதுமட்டும் இல்லாமல், ஜாக்குவார் தங்கத்தின் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளாராம்.

ஜாக்குவாருக்கு வழக்கு என்றால், இந்த பிரச்சனையை களப்பிய களஞ்சியத்திற்கு என்ன? என்றால், அவருக்கு நஷ்ட ஈடாக, ஏதாவது பணம் கொடுக்கலாமா என்று யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டு மொத்தத்தில் ஜாக்குவாருக்கு வழக்கும், களஞ்சியத்திற்கு நஷ்டஈடும் கொடுக்க அஞ்சலி தயாராகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments