மம்முட்டி படத்தில் விஜய்?!!!

28th of November 2013
சென்னை::மம்முட்டியுடன் இணைந்து விஜய் நடனமாடப் போவதாக செய்தி வெளியாகி உள்ளது.
 
மலையாளத்தில் மம்முட்டி, ரீமா கல்லிங்கள் நடிக்கவிருக்கும் படம் ‘கேங்ஸ்டர்’. இந்தப் படத்தை ஆஷிக் அபு இயக்குகிறார். இவர்தான் ’22 ஃபீமேல் கோட்டயம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.
 
இந்நிலையில் படத்தில் விஜய்யை எப்படியாவது ஒரு பாடலுக்கு  ஆடவைத்துவிட வேண்டும் என்று இயக்குனர் ஆஷிக் அபு ஆசைபடுகிறாராம். அதற்கான தீவிர முயற்சியில் இப்போதே இருங்கிவிட்டாராம்.
மலையாளத்தில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருப்பது ஊரறிந்த விஷயம். அதனால் மம்முட்டியின் படத்தில் விஜய் டான்ஸ் ஆடினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
 
ஏற்கெனவே விஜய், இந்தியில் ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் அக்ஷய்குமாருடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
tamil matrimony_HOME_468x60.gif

Comments