19th of November 2013
சென்னை::கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்திற்கு ‘நானும் ரௌடிதான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை சிம்பு, வரலட்சுமி நடித்த போடா போடி’ திரைப்படத்தை இயக்கிய விஷ்ணு சிவன் இயக்குகிறார். கௌதம் மேனன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
முதலில் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் அனிருத் தான். ஆனால் இப்போது கௌதம் கார்த்திக்கிற்கு கதை செட்டாகவே அவரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்துவிட்டார் விக்னேஷ் சிவன். இதன் படப்பிடிப்பு வரும் ஜனவரி-14ல் துவங்கவிருக்கிறது.
தற்போது கௌதம் கார்த்திக் சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
Comments
Post a Comment