சரத்குமாருக்கு ஜோடியாகும் இனியா!!!

27th of November 2013
சென்னை::கடந்த மூன்று வருடங்களாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சரத்குமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார். வேந்தன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

'வேளச்சேரி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். இதன் மூலம், இனியா சீனியர் நடிகர் ஒருவருக்கு முதன் முறையாக ஜோடியாக நடிக்கிறார்.

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கபப்ட்டுள்ள இபப்டம் குறித்து கூறிய சரத்குமார், "சில துணை கதாபாத்திரங்களில் நடித்தபிறகு எனக்கு ஒரே மாதிரியான வேடங்களே கிடைத்தன. ஆயினும் நான் ஒரு நல்ல கதைக்காகக் காத்திருந்தேன். வேளச்சேரி ஒரு நல்ல திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் இதனை இழப்பதற்கு நான் விரும்பவில்லை." என்றார்.

எண்கவுண்டர் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கும் சரத்குமார், அதற்காக தனது உடலை கட்டுக்கோப்பாகவும் மாற்றி வருகிறாராம்.
tamil matrimony_HOME_468x60.gif
 
 

Comments