11th of November 2013
சென்னை::எனக்கு மட்டும், ஏன்தான், இப்படி நடக்கிறதோ' என, கடும் டென்ஷனில், நகத்தை கடித்துக் கொண்டிருக்கிறார், ஆண்ட்ரியா. ஏற்கனவே,'கொலை வெறி' இசையமைப்பாளர் அனிரூத்துக்கும், இவருக்கும், காதல் என, செய்தி வெளியானது. அதற்கு பின், மலையாள நடிகர், பகத் பாசில் - ஆண்ட்ரியாவுக்கும் இடையே காதல் உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதெல்லாம் வதந்தி' என, அமைதியாக மறுத்த ஆண்ட்ரியா, தற்போது, 'இங்கே என்ன சொல்லுது' படத்தில் நடிக்கும்போது, சிம்புவுக்கும், ஆண்ட்ரியாவுக்கும், நெருக்கம் ஏற்பட்டு விட்டதாகவும், இதனால், சிம்புவின் காதலி, ஹன்சிகா, கடுப்பில் இருப்பதாகவும், வெளியாகியுள்ள வதந்தியால், ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.ஆண்ட்ரியா.
அந்த படத்தில், ஆண்ட்ரியாவுக்கும், சிம்புவுக்கும் இடையேயான, காதல் காட்சிகள், வெறும், ஐந்து மணி நேரம் மட்டுமே, படமாக்கப்பட்டன. அந்த காட்சிக்கு அவசியம் என்பதால், இருவரும் நெருக்கமாக நடித்தனர். இது, அவர்களின் தொழில் தொடர்பான விஷயம். இதற்கு மேல், அவர்களுக்கு இடையே, எந்த விஷயமும் இல்லை' என, கறாராக கூறியுள்ளது, ஆண்ட்ரியா தரப்பு. மேலும், 'தற்போதைய சூழ்நிலையில், ஆண்ட்ரியா, யாரையும் காதலிக்கவும் இல்லை' என்றும், ஆண்ட்ரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment