பழனி கோவிலில் நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம்!!!

26th of November 2013
சென்னை::பழனி மலைக் கோவிலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு நடிகர் உதயநிதி, நடிகை நயன்தாரா இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனியை அடுத்த கணக்கன்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் நடிகை நயன்தாரா, நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கதிர்வேலன்காதல் என்ற திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தை பிரபாகரன் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகி நடிகை நயன்தாரா,  நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஞாயிற்றுக் கிழமை இரவு மலைக் கோயிலுக்கு ரோப்கார் மூலம் வந்தனர்.

மூலவர் அருள்மிகு தண்டாயுத பாணி சுவாமியை ராஜ அலங்காரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். உதயநிதி ஸ்டாலினை புகைப்படம் எடுப்பதற்கு அவருடன் வந்திருந்த உதவியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர்களுக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

மேலும் அவர்களைப் பார்த்த பக்தர்கள் கூட்டம் புகைப்படம் எடுக்க கூட்டமாக ஓடி வரவே அவசரம், அவசரமாக சுவாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கினர்.

அவர்களுடன் வள்ளுவர் தியேட்டர் நடராஜன், அடிவாரம் காவல் துறை உதவி ஆய்வாளர் ஜெயா ஆகியோர் உடனிருந்தனர்.
     tamil matrimony_HOME_468x60.gif

Comments