29th of November 2013
சென்னை::மர்ம மனிதன் தாக்குதல் நடந்த பிறகும் ஸ்ருதி என்னுடன் தங்க மாட்டார் என்றார் தாய் சரிகா. கமல் - சரிகா மூத்த மகள் ஸ்ருதிஹாசன். பெற்றோரை பிரிந்து மும்பை பாந்த்ரா பகுதியில் தனி வீடு எடுத்து வசிக்கிறார். இளைய மகள் அக்ஷரா மட்டும் சரிகாவுடன் வசிக்கிறார்.
கடந்த வாரம் ஸ்ருதி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம மனிதன், அவரை தாக்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம மனிதனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பிறகு ஸ்ருதி உங்களுடன் வந்து தங்குவாரா? என்றதற்கு சரிகா பதில் அளித்தார். அவர் கூறும் போது, ஸ்ருதி மீது நடந்த தாக்குதல் எனக்கு கவலை அளித்துள்ளது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் சாதாரண மக்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
ஆனால் இந்த சூழலை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது ஸ்ருதிக்கு தெரியும். அவர் என்னுடன் வந்து தங்குவாரா என்கிறார்கள். ஸ்ருதிக்கு தொழில் முக்கியம். அவுட்டோர் ஷூட்டிங்குக்காக பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. பிள்ளைகள் வளர்ந்த பிறகு சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். அவர்களை நம் பிடிக்குள் வைத்து கொள்ள முயற்சிக்க கூடாது.
Comments
Post a Comment