அனிமேஷன் படத்தில் சூர்யா – அனுஷ்கா!!!

25th of Novembe
சென்னை::உலகை அச்சுறுத்தும் மிகக் கொடிய நோய்களில் முதலிடம் எய்ட்ஸ் உயிர்க்கொல்லி நோய்க்கு உண்டு. இந்த நோயை போக்குவதற்காகவும், கட்டுப்படுத்தவும் உலகம் முழுவதும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், டீச் எயிட்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்ஐவி, எயிட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தடுப்பு முறைகள் குறித்தும் உலக மக்களிடையே பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 75 நாடுகளில் இந்த அமைப்பு செயல்படுகிறது.

இந்திய அளவில் எயிட்ஸ் பாதிப்பு அதிகம் ஏற்பட்டள்ள மாநிலம் தமிழகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். உலக எயிட்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் டிசம்பர் முதல் தேதியில் உலகம் முழுவதும் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

டீச் எயிட்ஸ் அமைப்பும் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில், இந்த அமைப்பு தமிழ் அனிமேஷன் என்ற பெயரில் உருவாக்கியுள்ள எயிட்ஸ் விழிப்புணர்வு தமிழ் அனிமேஷன் படத்தின் காட்சிகளில் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த அனிமேஷன் காட்சிகளில் நடிகர்கள் சூர்யா, சித்தார்த், நடிகைகள் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த தமிழ் அனிமேஷன் படத்தை இணையம் வைத்திருக்கிறவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் இதை சிடி வடிவில் இலவசமாக வழங்கும் பணியை தமிழக அரசின் எயிட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டி செய்து வருகிறது.

டீச் எயிட்ஸ் அமைப்பும், தமிழக அரசின் எயிட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டியும் இணைந்து சுயஉதவி குழுக்கள், நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக கிராமப்புறங்களில் எயிட்ஸ் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தும்போது இந்த தமிழ் அனிமேஷன் விழிப்புணர்வு படத்தை திரையிடுவார்கள்.

இந்த அனிமேஷன் படத்தில் இடம்பெற்றது குறித்து நடிகை அனுஷ்கா கூறும்போது, ‘எயிட்ஸ் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு இதுபோன்ற பரவலான கல்வி திட்டங்கள், குறும்படங்கள் மூலம்தான் மக்களிடையே எடுத்து செல்ல முடியும். அதிலும் டீச் எயிட்ஸ் அமைப்பு உருவாக்கியுள்ள தமிழ் அனிமேஷன் படத்தில் உள்ள காட்சிகள் 2 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர் வரை சுலபத்தில் புரிந்து கொள்ளும் விதமாக உள்ளது. இளம் வயதினரை கவரும் விதமாக அறிவியலும், பொழுதுபோக்கும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

நடிகர் சித்தார்த் கூறும்போது, ‘டீச் எயிட்ஸ் உருவாக்கியுள்ள இந்த அனிமேஷன் காட்சியில் நானும் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என் நடிப்பு வாழ்க்கையில் இந்த விழிப்புணர்வு அனிமேஷன் காட்சிகளில் நானும் இடம் பெற்றிருப்பது சந்தோஷமே. இதை பார்க்கிறவர்களுக்கு ஏராளமான கேள்விகள் தோன்றும். பார்த்து முடிந்ததும் அந்த கேள்விகளுக்கு பதிலும் கிடைத்துவிடும் என்றார்.

நடிகை சுருதிஹாசன் கூறும்போது, மிக முக்கியமான விழிப்புணர்வு அனிமேஷன் காட்சிகளில் நானும் இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

2011-ம் ஆண்டில் டீச் எயிட்ஸ் அமைப்பு இதேபோன்ற அனிமேஷன் படத்தை தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டது. அதில் நாகர்ஜூனா, ஷாபனா ஆஸ்மி, அனுஷ்கா, சுருதிஹாசன் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

ஆந்திர பிரதேச எயிட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த அனிமேஷன் படத்தை பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ முகாம்கள் மூலமாக இலவசமாக வினியோகித்தது. சுமார் 25 ஆயிரம் சிடிக்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. ‘மா டிவி’, ‘தூர்தர்ஷன் டிவி’யிலும் இந்த அனிமேஷன் காட்சிகள் வெளியிடப்பட்டது.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு அமைப்புகள் இவர்களுடன் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார்கள். ஸ்டன்போர்டு பல்கலைக்கழகமும், டீச் எயிட்ஸ் அமைப்பும் செயல்படுத்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு யூனிசெப், கூக்லி, டிலைட், டாடா ஸ்டீல், சிக்னா மற்றும் யாஹூ நிறுவனங்களும் கைகோர்த்திருக்கிறார்கள் என்கிறார் டீச் எயிட்ஸ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் பியா சர்கார்.
     tamil matrimony_HOME_468x60.gif

Comments