25th of November 2013
சென்னை:: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம் ‘பென்சில்‘. இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் கவுதம் மேனனிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த மணி நாகராஜ் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷே படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குனர் மணி நாகராஜ் பேசியதாவது:-
நான் ஜி.வி.பிரகாஷ் ரெக்கார்டிங்ல பாடும்போது கேட்டிருக்கிறேன். அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பாடுவார். அவருக்குள் ஒரு நடிகன் இருக்கான்னு எனக்கு தெரிஞ்சுது. என்னுடைய முதல் படத்தில் அவரை நடிக்க வைச்சா என்னன்னு தோணுச்சு. கதையை அவர்கிட்ட சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது.
இந்த படம் ஒரு ஸ்கூலில் நடக்கிற விஷயத்தை மையமாக வைத்து திரில்லர் கதையாக படமாக்கியுள்ளோம். இதுவரைக்கும் இப்படி ஒரு விஷயத்தை யாருமே தொட்டதில்லை. 12-ம் வகுப்பு வரைக்கும் பள்ளிக்கூடத்தில் பென்சில் என்பது ரொம்ப முக்கியமான விஷயம். எழுதிய பிறகும், தேவைப்படும் போது அழித்துக் கொள்ளலாம். படத்தின் கதைக்கும் அது பொருந்தியதால் இந்த தலைப்பு வச்சோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, இயக்குனர் மணி நாகராஜ் என்னுடையே நீண்ட நாள் நண்பர். அவரும் நானும் சேர்ந்து நிறைய ஜிங்கிள்ஸ் பண்ணியிருக்கிறோம். அவர் நிறைய படம் ஆரம்பிச்சு பாதியிலேயே ட்ராப் ஆகிடுச்சு. ஒரு படமாவது டைரக்டர் பண்ணிவிட வேண்டும் என முயற்சி செய்துகொண்டு இருந்தார். அவருக்கு கைகொடுக்கணும்னுதான் நட்பு அடிப்படையில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றார்.

Comments
Post a Comment