ரஜினி தலைப்பில் விஷால் நடிக்கும் புதுப்படம்!!!

1st of November 2013
சென்னை::யூடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தன் அடுத்த படத்தை அறிவித்துள்ளது.
 
படத்தின் பெயர் 'நான் சிகப்பு மனிதன்'. விஷால் கதாநாயகனாக நடிப்பதுடன் தன் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியையும் யூடிவி யுடன் இணைத்துக் கொண்டு தயாரிப்பிலும் பங்கேற்கிறார்.

விஷாலுடன் திரையில் இணைந்து நடிக்க இருக்கிறார் லட்சுமி மேனன். படத்தின் கதையை எழுதி இயக்குகிறார் திரு.இவர் விஷாலை வைத்து ஏற்கெனவே 'சமர்' படம் இயக்கியவர்.  'நான் சிகப்பு மனிதன்'ஒரு முழுநீள ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும்.

நவம்பர் 3 வது வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து 2014 சம்மர் சீசனில் வெளியிடத்திட்டம்.

'நான் சிகப்பு மணிதன்' 1985ல் வெளியான படம். சூப்பர் ஸ்டார் ரஜினி நாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம். கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் அந்த தலைப்பைக்கேட்டு வாங்கி பயன்படுத்தப் படுகிறது.

"இயக்குநர் கூறிய கதை பிடித்ததால் இந்தப் படம் திட்டமிப் பட்டது. இது நிச்சயமாக விஷாலுக்கு மிக முக்கிய படமாக இருக்கும்.எதிர்பாராத படமாகவும் இருக்கும்." என்கிறார் யூடிவியின் தென்னிந்திய தலைமை நிர்வாகி ஜி.தனஞ்ஜெயன்.

படம் பற்றி விஷால் கூறும் போது, ''இந்தப் பட கூட்டணி பற்றி மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் 2வது படமே யூடிவியுடன் இணைவதில் பெருமை. அனைவரது அன்பாலும் ஆதரவாலும் படம் சிறப்பாக வருமென்று நம்புகிறேன்." என்கிறார்.

இயக்குநர் திரு கூறும் போது, " நான் இந்தப் படக்குழு பற்றி பெருமைப் படுகிறேன். யூடிவி யாகட்டும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியாகட்டும் குழுவில் உள்ள ஒவ்வொருவருமே குழுவின் பலம் என்று சொல்லும்படி இருப்பது சிலிர்ப்பாக இருக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் இது வியப்பும் ஊக்கமும் அளிக்கிற படக்குழு என்று பெருமிதமாகக் கூறுவேன். இந்த அருமையான குழுவினருடன் இணைந்து இயங்கப் போகிற நாட்களுக்காக, அந்த அனுபவங்களுக்காக காத்திருக்கிறோம். " என்கிறார்.

படத்துக்கு ஒளிப்பதிவு.-ரிச்சர்ட் எம்.நாதன், இசை -எஸ்.எஸ் தமன், பாடல்கள்-மதன் கார்க்கி, எடிட்டிங் -அந்தோனி எல். ரூபன், ஆர்ட்- ஜாக்கி.,தயாரிப்பு- ரோனி ஸ்க்ருவாலா- சித்தார்த் ராய் கபூர்-விஷால்

யூடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து உருவாக்கும் 'நான் சிகப்பு மனிதன்' விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

tamil matrimony_HOME_468x60.gif

Comments