22nd of November 2013
சென்னை::ஆர்யாவை நடிகைகளுடன் இணைத்து கிசு கிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே நயன்தாராவுடன் தொடர்பு படுத்தி பேசப்பட்டார். வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்ததாகவும் பேசப்பட்டது. பின்னர் இரண்டாம் உலகம் படத்தில் ஜோடியாக நடித்த அனுஷ்காவுடன் காதல் என பேச்சு அடிபட்டது. இதையெல்லாம் ஆர்யா மறுத்தார்.
இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது:–
நடிகைகள் பலருடன் என்னை இணைத்து செய்திகள் வருகின்றன. இதை விளம்பரத்துக்காக நானே கிளப்பி விடுவதாக சொல்வது தவறு. என்னைப் பற்றி இதுபோல் வதந்திகள் பரவுவதை தடுக்க முடியாது. ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல எனக்கு நேரமும் இல்லை. திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
எனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணை இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனக்கு பிடித்த பெண்ணைதான் திருமணம் செய்து கொள்வேன். அது நடிகையாகவும் இருக்கலாம். சினிமாவில் நயன்தாரா எனக்கு பொருத்தமான ஜோடியாக இருக்கிறார். இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளன.
இவ்வாறு ஆர்யா கூறினார்.

Comments
Post a Comment