15th of November 2013
சென்னை::பொங்கல் ரேஸில் கோச்சடையான் இணைந்திருப்பதால் வீரம், ஜில்லா படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.
2014 பொங்கல் நமக்கு மறக்க முடியாத ஒன்றாக அமையப்போவதில் எந்த சந்தேகமும் இல்லை. விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் என இரு மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது.
தற்போது இந்த பொங்கல் போட்டியில் ரஜினியின் கோச்சடையான் திரைப்படமும் இணைந்ததிருப்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு. கோச்சடையான் படத்தை டிசம்பர் 12ம் தேதி, அதாவது ரஜினியின் பிறந்த நாளன்றுதான் ரிலீஸ் செய்ய இருந்தார்கள். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை திடீரென ஜனவரி 10க்கு மாற்றி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளனர். பொதுவாக ரஜினி படம் என்றாலே வசூல் அள்ளிவிடலாம் என்பது தியேட்டர் அதிபர்கள் கருத்து. இதனால் தியேட்டர் அதிபர்கள் அவருக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அதனால் இந்த பொங்கலுக்கு அநேக தியேட்டர்கள் கோச்சடையானுக்கு தான் அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் அஜீத், விஜய் படங்களுக்கு தியேட்டர் குறைய வாய்ப்பு இருப்பதுடன், வசூல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. எனவே கோச்சடையான் ரிலீஸ்க்கு சிலவாரங்கள் கழித்து வீரம், ஜில்லா படங்களை ரிலீஸ் செய்யலாமா அல்லது அதற்கு முன்பாகவே ரிலீஸ் செய்யலாமா என படக்குழு யோசித்து வருகிறது.
இதனால் வீரம், ஜில்லா படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.
Comments
Post a Comment