புது நடிகைகளின் வரவால் எந்த பயமும் இல்லை: ஓவியா!!!

21st of November 2013
சென்னை::புது நடிகைகளின் வரவால் தனக்கு எந்த பயமும் இல்லை என்றார் ஓவியா. மேலும் அவர் கூறியதாவது:தமிழில் நான் நடித்த ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. அடுத்து ‘புலிவால்’ ரிலீசுக்கு தயாராகி விட்டது. கிருஷ்ணா ஜோடியாக ‘இல்ல ஆனாலும் இருக்கு’ படத்திலும் வித்தியாசமான கேரக்டர்.

நான் நடிக்க வந்தபோது, நிறைய புதுமுகங்கள் இருந்தார்கள். என்றாலும், எனக்கு எந்த வேடம் கிடைக்க வேண்டுமோ அது கிடைத்தது. யார் வாய்ப்பையும் தட்டிப்பறித்தது இல்லை. இப்போது நிறைய புது நடிகைகள் வருகிறார்கள். அவர்களால் எனக்கு எந்த பாதிப்பும் கிடையாது. தமிழில் அதிக கவனம் செலுத்துவதால் கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடிக்கவில்லை. -
tamil matrimony_HOME_468x60.gif

Comments